பெரியார் - 2008ன் சிற‌ந்த படம்!

வெள்ளி, 12 செப்டம்பர் 2008 (18:05 IST)
புதுவை அலையன்ஸ் பிரான்சியஸ் வருடம்தோறும் நடத்தும் இந்திய திரைப்பட விழாவை இந்த வருடமும் தொடங்கியுள்ளது!

இது 23வது இந்திய திரைப்பட விழா. ஒவ்வொரு நாள் மாலை 6 மணிக்கு புதுவை அலையன்ஸ் பிரான்சியஸில் சிறந்த இந்திய திரைப்படங்கள் திரையிடப்படும்.

இவ்விழாவில் ஞானராஜசேகரன் இயக்கத்தில் சத்யராஜ், குஷ்பு நடித்த பெரியார் திரைப்படம் திரையிடப்படுகிறது. இங்கு திரையிடப்படும் மற்றொரு தமிழ்ப் படம், பார்த்திபன், பாரதி நடித்த அம்முவாகிய நான்.

மலையாளத்தில் வெளியான கதபறயும் போள் இந்திய தர்ம் ஆகியவையும் திரையிடப்படுகின்றன.

2008ன் சிறந்த திரைப்படமாக பெரியார் தேர்வு செய்யப்பட்டுள்ளது. புதுவை அரசின் செய்தி மற்றும் விளம்பரத் துறையும், நவதர்சன் திரைப்பட கழகமும் இணைந்து பெரியார் படத்தை தேர்வு செய்துள்ளன.

சங்கரதாஸ் சுவாமிகள் விருதுக்கு பெரியார் படத்தை இயக்கிய ஞானராஜசேகரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த விருதுகளை அலையன்ஸ் பிரான்சியஸில் நடக்கும் விழாவில் புதுச்சேரி முதல்வர் வைத்திலிங்கம் வழங்குகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்