வரிகளுக்கு வருமா சென்சார்?

வெள்ளி, 12 செப்டம்பர் 2008 (14:30 IST)
ஆபாசமான காட்சிகளுக்கு கண்ணில் லென்ஸ் வைத்து கத்திரி போடும் சென்சார், காதுக்கு வேலை கொடுக்கும் வேளை வந்திருக்கிறது.

காமெடி என்ற பெயரில் வரும் இரட்டை அர்த்த வசனங்களே பெரும்பாலும் சென்சார் கத்திரியில் மாட்டும். சில வேளை மயிர் என்ற தூய தமிழ் வார்த்தையையும் 'மியூட்' செய்யும் சென்சார் விரசமான பாடல் வரிகளுக்கு விசால மனம் காட்டுவது, வியப்பு!

என்னை வச்சுக்கடா இல்லை கட்டிக்கடா... தீப்பிடிச்ச அந்த இடம் தித்திக்குமடா... இதெல்லாம் விரைவில் வெள்ளித்திரை காண இருக்கும் படங்களில் வரும் விரச பாடல் வரிகள்.

தனுஷ் - தமன்னா நடிக்கும் படிக்காதவனிலும் இடம்பெறுகிறது இதற்கு சற்றும் சளைக்காத பாடல் வரிகள். ராங்கி ரங்கம்மா... ரவிக்கை எங்கம்மா என்ற அந்த கவித்துவ வரிகளை எழுதியவர், வித்தக கவிஞர் பா. விஜய்.

தெருவில் இந்த வரிகளை ஒரு இளைஞர் பாடினால், லாக்கப். திரையில் பாடினால் பேமெண்ட்! என்ன நீதி இது?

வெப்துனியாவைப் படிக்கவும்