எவர்கிரீன் நடிகர் என்பதற்கு சரியான உதாரணம், ஒரே உதாரணம் எம்.ஜி.ஆர்.
இறந்து இத்தனை வருடங்கள் கழிந்த பின்பும் வசூலில் அவர் இன்றும் முடிசூடா மன்னர். சென்ற வருடம் அவர் நடித்த சில படங்களை புதுப்பொலிவுடன் ரிலீஸ் செய்தனர். ஆச்சரியம்... முப்பது வருடங்களுக்கு முன்பிருந்ததுபோல் முண்டியடித்தது கூட்டம்.
இந்தியில் பழைய படங்களை கலருக்கு மாற்றி திரையிடுவது தொடர்ந்து நடந்து வருகிறது. அப்படி வெளியான மொகல் இ ஆசாத் இந்தியா மட்டுமின்றி பாகிஸ்தானிலும் அமோக வரவேற்பை பெற்றது.
இதனை மனதில் வைத்து எம்.ஜி.ஆர். நடித்தப் படங்களை டி.டி.எஸ். ஒலி சேர்த்து, கலர்·புல் கிரா·பிக்ஸ¤டன் புதுப்படம் போல் வெளியிட தயாராகிறது டைமண்ட் பிலிம்ஸ் நிறுவனம்.
முதல்கட்டமாக 1973-ல் எம்.ஜி.ஆர். இயக்கி நடித்த உலகம் சுற்றும் வாலிபன் டிடிஎஸ், கிராஃபிக்ஸ் கலக்கலுடன் தமிழகம் முழுக்க வெளியாகிறது. எம்.ஜி.ஆர். படங்களைத் தொடர்ந்து சிவாஜியின் படங்களையும் பாலிஷ் செய்து வெளியிடும் முனைப்பில் இருக்கின்றனர்.
இந்த பழைய சூப்பர் ஸ்டார்கள் பாக்ஸ் ஆஃபிஸை கைப்பற்றினாலும் ஆச்சரியமில்லை!