தமிழ் திரையுலகை மறக்காத மகேஸ்வரி!

வியாழன், 11 செப்டம்பர் 2008 (19:47 IST)
வந்தாரை வாழவைக்கும் தமிழகத்துக்கு நடிகைகள் அல்வா கொடுப்பதுதான் வரலாறு. புகழின் உச்சியில் தங்களை வைத்த தமிழ் திரையுலகினரை திருமணத்திற்கு கூட அழைப்பதில்லை சில நடிகைகள். சிம்ரன், லைலா என்று இந்தப் பட்டியல் பெரிது.

தமிழில் பிரகாசிக்கவில்லை என்றாலும் தமிழ் திரையுலகை மறக்காமலிருக்கிறார் மகேஸ்வரி. கருத்தம்மா, உல்லாசம் படங்களில் நடித்த மகேஸ்வரி வரும் 18 ஆம் தேதி திருமதி ஆகிறார். திருப்பதியில் மகேஸ்வரி - ஜெய் கிருஷ்ணா திருமணம் நடைபெறுகிறது.

திருமணம் முடிந்த கையோடு தென் ஆப்ரிக்காவிற்கு தேனிலவு சென்றாலும், மகேஸ்வரியை யாரும் கேட்கப் போவதில்லை. ஆனால், திருமணம் முடிந்த மறுநாள் தனது தமிழ்த் திரையுலக நண்பர்களுக்காக சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி வைத்துள்ளார் மகேஸ்வரி.

ஏணியை எட்டி உதைக்கும் நடிகைகள் கவனிக்க வேண்டிய விஷயம்.

வெப்துனியாவைப் படிக்கவும்