ஷாலினி, ரிஷி (ரிச்சர்ட்) ஆகியோரின் தங்கை ஷாம்லி மீண்டும் நடிக்க வருகிறார்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஷாம்லியை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. அஞ்சலியில் மன வளர்ச்சி குன்றிய குழந்தை கதாபாத்திரத்தில் ஷாம்லியின் நடிப்பு உலக ஆச்சரியம்.
வளர்ந்த பிறகு படிப்பில் கவனம் செலுத்தியவர், படங்களில் நடிக்கவில்லை. ராஜீவ் மேனனின் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேனில் நடித்ததே கடைசிப் படம்.
குமரி ஆகிவிட்ட ஷாம்லியை தேடி நிறைய கதாநாயகிகள் வாய்ப்பு வரத் தொடங்கியுள்ளன. படிப்பை மூட்டைக் கட்டி நடிப்பில் குதிக்க அவரும் தயார்.
தெலுங்கில் சித்தார்த் நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் ஷாம்லி. சென்ற வருடம் ஆந்திராவை அலற வைத்த பொம்மரிலு படத்தில் அசிஸ்டெண்டாக பணிபுரிந்த ஆனந்த ரங்கா என்பவர் இயக்கும் படத்தில்தான் நாயகியாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் ஷாம்லி.
ஷாலினிக்கு திருமணம் ஆனதால் ஏற்பட்ட வெற்றிடத்தை சினிவில் நிரப்புவாரா ஷாம்லி?