தனம் - சர்ச்சையும் கண்டனமும்!

வியாழன், 11 செப்டம்பர் 2008 (19:42 IST)
கொலை மிரட்டலைத் தொடர்ந்து பலரின் சினத்துக்கு ஆளாகயிருக்கிறார் தனம் இயக்குனர்!

காசுக்கு உடம்பை விற்கும் தாசியை காதலித்து கைப்பிடிக்கிறார் ஆச்சாரமான பிராமண குடும்பத்து இளைஞன். ஜோசியத்தை கண்மூடித்தனமாக நம்பும் இளைஞனின் குடும்பத்தினர், ஜோசியர் சொன்னதை கேட்டு அவனுக்கு தாசியின் மூலமாக பிறக்கும் குழந்தையை கள்ளிப்பால் கொடுத்துக் கொன்று விடுகின்றனர். தனது குழந்தையை கொன்றவர்களை உணவில் விஷம் வைத்துக் கொல்கிறாள் தாசி.

ஜோசியத்துக்கும், மூடநம்பிக்கைக்கும் எதிரான படம் என்று, தனம் இயக்குனர் ஜி. சிவா வியாக்யானம் அளித்தாலும், பார்ப்பன சார்பு இயக்கங்களும், அமைப்புகளும் இட்டுக் கட்டி சொல்லியிருக்கும் நச்சு படைப்பு என்று சிவாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது, பெண்கள் நலச்சங்கம்.

இந்து மக்கள் கட்சியும் தனம் படத்தின் கதைக்காக சிவாவை கண்டித்துள்ளது. இந்த இலவச விளம்பரங்களால் தனத்தின் வசூல் பொலிவடைய வாய்ப்புகள் உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்