ரீ-ஷூட்டாகும் பந்தயக் கோழி!

செவ்வாய், 9 செப்டம்பர் 2008 (20:39 IST)
விரைவில் நரேன், பூஜா நடித்திருக்கும் பந்தயக் கோழி வெளியாகிறது. பூஜா மூக்குத்தி அணிந்து நடித்திருக்கும் இந்த ஆக்சன் படம் உண்மையில் நரேன் நடித்த மலையாளப் படத்தின் டப்பிங்.

இது தெரியாமல் இருக்கவும் தமிழ் ரசிகர்களை கவரவும் சில காட்சிகளை ரீ-ஷூட் செய்கின்றனர். தவிர நிழல்கள் ரவி சம்பந்தப்பட்ட காட்சிகள் சிலவற்றை புதிதாக பந்தயக் கோழியில் சேர்க்கவும் திட்டமிட்டுள்ளனர்.

தற்போது பூக்கடை ரவி படத்தில் நடித்து வருகிறார் நரேன். பூஜாவுக்கு நான் கடவுள் ரிலீஸாக வேண்டும். இரு படங்களும் வெளியாக தாமதமாகும் என்பதால், இடைவெளியை நிரப்பும் இடைச்செருகலாக பந்தயக் கோழியின் வெற்றியை இருவருமே எதிர்பார்க்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்