தீபாவளிக்கு ஏகன் - பொங்கலுக்கு வில்லு!

செவ்வாய், 9 செப்டம்பர் 2008 (17:55 IST)
ஐங்கரன் இன்டர்நேஷனல்ஸ் தயாரிக்கும் ஏகன் தீபாவளிக்கு வெளியாவது உறுதியாகியிருக்கிறது.

இந்தியில் ஷாருக்கான் நடித்த மெய்ன் ¤ன் னா படமே ஏகனாக உருவாகிறது. ராஜு சுந்தரம் இயக்குகிறார்.

தீபாவளிக்கு முன் ஏகன் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தீபாவளிக்கு படத்தை வெளியிடவே தயாரிப்பாளர் மற்றும் அஜித்தின் விருப்பம். முன்னதாக அக்டோபர் பதினொன்று படத்தில் பாடல்களை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

தீபாவளிக்கு விஜயின் வில்லு வெளியாகும், தீபாவளி ரேஸ் களை கட்டும் என்ற எதிர்பார்ப்பு நடக்கப் போவதில்லை. வில்லு படப்பிடிப்பு இன்னும் முடியாததால் பொங்கலுக்கு பட வெளியீட்டை தள்ளிவைத்துள்ளனர்.

ஏகன், வில்லு இரண்டின் தயாரிப்பாளரும் ஒருவரே என்பதும் இதற்கு முக்கிய காரணம்.

வெப்துனியாவைப் படிக்கவும்