செப். 12 'பூ' இசை!

மோசர் பேர் தயாரிக்கும் பூ படத்தின் இசை செப்டம்பர் 12 வெளியிடப்படுகிறது.

ச. தமிழ்ச்செல்வனின் வெயிலோடு போய் சிறுகதையை இயக்குனர் சசி பூ என்ற பெயரில் எடுத்து வருகிறார். ஸ்ரீகாந்த், புதுமுகம் பார்வதி நடித்துள்ளனர். எஸ்.எஸ். குமரன் இசையமைத்துள்ளார்.

சொல்லாமலே தொடங்கி டிஷ்யூம் வரை சசி இயக்கிய அனைத்துப் படங்களின் பாடல்களும் தமிழர்களின் நெஞ்சாங்கூட்டில் நிலைத்து நிற்பவை. பூ மட்டும் விதிவிலக்காகுமா? செப்டம்பர் 12க்கு காத்திருக்கிறார்கள் இசை ரசிகர்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்