சென்னை பின்னி மில்லில் நடந்து கொண்டிருக்கிறது சூரியன் சட்டக் கல்லூரி. சட்டக் கல்லூரி என்றால் கெட்ட கல்லூரி என்ற பெயரை எனது இந்தப் படம் மாற்றும். சொன்னவர், ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த சிவசக்தி பாண்டியன்.
தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளராக இருக்கும் இவர் தயாரிக்கும் புதிய படம் சூரியன் சட்டக் கல்லூரி. படத்தின் கதையும் இவரே. திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறவர் பவன். கஜினி, மித்ரா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். ராதாரவி, கஞ்சா கருப்பு ஆகியோரும் உண்டு.
சங்க செயலாளராக நின்றுபோன பல படங்களை ரிலீஸ் செய்ய நெம்புகோலாக இருந்திருக்கிறார் சிவசக்தி பாண்டியன். அந்த அன்பு காரணமாக சூரியன் சட்டக் கல்லூரியை திரையுலகமே திரண்டு வந்து வாழ்த்தியது.
இவரின் எஸ்.எஸ். மூவிமேக்கர்ஸ் படத்தை தயாரிக்கிறது.