அங்காடித்தெருவில் விக்ரமாதித்யன்!

களங்கமில்லா சிரிப்பு, கழுத்து வரை நீளும் தாடி, தோளில் புரளும் சிகை... போதையை தவிர்க்காத கண்கள்... இதுதான் கவிஞர் விக்ரமாதித்யன்.

கவிதைக்காக வாழ்வை அர்ப்பணித்த இந்த நாடோடி கலைஞனை நான் கடவுளில் பாலா நடிகனாக்கியது தெரியும். பாலாவை தொடர்ந்து, வசந்த பாலனும் தனது அங்காடித் தெருவில் கவிஞரை நடிக்க வைத்துள்ளார்.

புதுமுகம் மோகன், கற்றது தமிழ் அஞ்சலி நடிக்கும் இப்படத்தின் பெரும்பகுதி சென்னை தி.நகர் பகுதியில் படமாக்கப்பட்டது. இரவு நேர படப்பிடிப்பில் கவிஞரும் கலந்து கொண்டார். என்ன ரோல் அண்ணாச்சி என்று கேட்டதற்கு, சொல்லக்கூடாதுன்னு சொல்லியிருக்கிறாரே இயக்குனர் என்றார் வெள்ளை சிரிப்புடன்.

கவிதை உலகம் தந்த நடிகர். நல்லா பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

வெப்துனியாவைப் படிக்கவும்