இயல்பாக வாழ வழியில்லாத காரணத்தால், தனது மனதின் ஏக்கங்களை செயற்கை வண்ணங்களைக் கொண்டு ஓவியம் வரைவதில் செலுத்தி, அதையே தனது வாழ்க்கையாக ஏற்றுக்கொள்ள நினைக்கிறார் அந்த அரவாணி. ஆனால், இந்தக் கேடுகெட்ட சமூகத்தில் அந்த அரவாணியால் எவ்வளவு தூரம் தனது வண்ணங்களுடன் வாழ முடிகிறது? இறுதியில் என்னவாகிறது? என்பதே இந்த மிஸ்ஸிங் கலர்ஸ் கூறும் செய்தி.சென்னை பிலிம் சேம்பர் திரையரங்கில் சனிக்கிழமை, 'மிஸ்ஸிங் கலர்ஸ்' பிரிவியூ பார்த்த அனைவரின் மனதிலும் ஏதோ ஒன்று மிஸ்ஸிங்.
இந்தக் குறும்படத்தை இயக்கியிருப்பவர் பிரசாந்த் கானாத்தூர். 34 வயது இளைஞரான இவருக்கு இது இரண்டாவது படம். முதல் படம் ஜென்மம், 2006 இல் வெளியாகி பல விருதுகளைப் பெற்றது.
தான் பவுண்டேஷன் சிறந்த திரைப்பட விருது, கேரள திரைப்படத் துறையின் சிறந்த குறும்பட விருது, சிறந்த இயக்குநர் விருது, கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் சிறந்த குறும்பட விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார் பிரசாந்த் கானாத்தூர்.