கெளதமனின் படங்கள்!

சனி, 6 செப்டம்பர் 2008 (19:49 IST)
ஆட்டோ சங்கர், சந்தனக்காடு என்று டி.வி. பக்கம் நீண்ட ட்ரிப் அடித்த கெளதமன், சினிமாவுக்கு ரிட்டர்ன் ஆகியிருக்கிறார். இடைவெளி அதிகமென்பதால் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் கவனம் செலுத்துகிறார் இந்த கனவே கலையாதே இயக்குனர்.

எழுத்தாளர் நீல. பத்மநாபனின் தலைமுறைகள் நாவலை கெளதமன் மகிழ்ச்சி என்ற பெயரில் இயக்கி நடிக்கயிருப்பது தெரியும். இன்னொரு படத்தில் கெளதமன் இயக்கம் மட்டும், பிரதான வேடத்தில் சத்யராஜ், பிரகாஷ்ராஜ். காதல் கோட்டை மாதிரி இதன் பெயர் நட்புக் கோட்டை.

முதலில் மகிழ்ச்சியோ, இல்லை நட்புக் கோட்டையோ? முடிவு செய்ய முடியாத குழப்பத்தில் இருக்கிறார் கெளதமன். பேசாமல் பூவா தலையா போட்டுப் பார்க்கலாமே!

வெப்துனியாவைப் படிக்கவும்