மாதவனின் இருமொழிப் படம்!

மாதவன், ஷமிதா ஷெட்டி, சதா நடித்திருக்கும் படம் லீலை. ராம்கோபால் வர்மாவுடன், இந்தி தயாரிப்பாளர் ஒருவர் இணைந்து தயாரித்திருக்கும் படம்.

இருவருக்குள்ளும் கருத்து மோதல் ஏற்பட்டு, பாதியில் படம் நின்றுபோகும் நிலைமை. எப்படியோ சமாளித்து இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது லீலை.

இந்தப் படத்திற்கு ஒரு விசேஷம். மாதவன் நடித்த படங்கள் தெலுங்கில் 'டப்' செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாராகும் படத்தில் மாதவன் இதுவரை நடித்ததில்லை. முதல் முறையாக லீலை தமிழ், தெலுங்கில் தயாராகி உள்ளது.

சுவாரஸ்யமான க்ரைம் த்ரில்லர், லீலை. இந்த வருட இறுதியில் படத்தை திரையில் எதிர்பார்க்கலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்