சித்தார்த் என்ற பெயர் விளம்பர உலகில் பிரபலம். வித்தியாசமான, பார்வையை இழுத்துப் பிடிக்கும் சினிமா விளம்பரங்கள் எதையேனும் நீங்கள் பார்க்க நேர்ந்தால், அது சித்தார்த்தின் கைவண்ணமாக இருக்கும்.
ரஜினியின் சிவாஜி, சேரனின் மாயக்கண்ணாடி, விக்ரமின் பீமா, ஜீவாவின் உன்னாலே உன்னாலே... என சித்தார்த் டிஸைன் செய்த படங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.
இதுவரை டிஸைனராக அறியப்பட்ட சித்தார்த் முதல் முறையாக திரைப்படம் ஒன்றை இயக்குகிறார். கல்பாத்தி அகோரம் தயாரிக்கும் இப்படத்தில் பிரசன்னா ஹீரோவாக நடிக்கிறார்.
டிஸைனில் தனித்தன்மையுடன் விளங்குகிறவர் தனது முத்திரையை இயக்கத்தில் பதிப்பாரா?