என்னுடைய கோயில்... நமிதா விளக்கம்!

சனி, 6 செப்டம்பர் 2008 (13:29 IST)
குஷ்புவுக்கு கோயில் கட்டிய ரசிகர்கள் எனக்கு கோயில் கட்டினால் அந்த கோயில் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா...?
webdunia photoWD

படிக்கும் போதே ஓவர் பில்டப்பாக தெரியுமே. கேள்வி கேட்டதோடு நிற்காமல், கோயிலின் வாஸ்துவையும் அழகாக விளக்கிச் சொன்னவர் வேறு யாருமில்லை, நமிதா!

தூத்துக்குடிக்கு கடை திறப்பு விழாவுக்கு வந்தவர், லோக்கல் நிருபர்களுக்கு மினி லெக்சர் அளித்தார். அப்போது சொன்னது தான் இந்த கோயில் சமாச்சாரம்.

என்னுடைய கோயிலில் ஏழை மாணவர்கள் படிக்க மின் விளக்குகள், மின் விசிறிகள் இருக்க வேண்டும். மத வேறுபாடு இல்லாமல் சர்வ மதத்தினரும் வந்து செல்லும் கோயிலாக திகழ வேண்டும்.

குஷ்புவுக்கு கோயில் கட்டியதால் ஏற்பட்ட களங்கமே இன்னும் மாறவில்லை. அதற்குள் நமிதா. ரசிகர்கள் கட்டவில்லையென்றாலும் நமிதாவே அவருக்கொரு கோயில் கட்டி கும்பாபிஷேகமும் நடத்துவார். காரணம், இது தமிழ்நாடாயிற்றே!