ஜெய் காட்டில் அடை மழை. விசேஷம் என்னவென்றால் இவ்வளவு சம்பளம் வேண்டும் என்று அவராக கேட்பதில்லை. கேட்காமலே ஆளாளுக்கு சம்பளத்தை அரை கோடிக்கு உயர்த்தியிருக்கிறார்கள்.
கைவசம் கால் டஜன் படங்கள் வைத்திருக்கும் ஜெய்யின் புதிய அவதாரம், வாமணன்.
ட்ரீம் வேலி கார்ப்பரேஷன் தயாரிக்கும் வாமணனில் ஜெய் நாயகனாக நடிக்கிறார். மாடலிங் செய்துவரும் பிரியா ஆனந்த் ஹீரோயின். இன்னொரு ஹீரோயின் லட்சுமிராய். இவர்களுடன் ஊர்வசி, சந்தானம் ஆகியோரும் நடிக்கின்றனர்.
கதிரின் உதவியாளர் அகமத் வாமணனை இயக்குகிறார். அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவில் அதிரடிப் படமாக உருவாகயிருக்கிறது வாமணன்.