பார்த்திபனின் புள்ளகுட்டிக்காரன், ப்ரியதர்ஷனின் லேசா லேசா. இரண்டு படங்களில் 'தலை'காட்டிய சீனிவாசன் வேறு எந்த தமிழ்ப் படட்ஙகளுக்கும் கால்ஷீட் கொடுத்ததில்லை.
நடிகர், கதாசாரியர், திரைக்கதையாசிரியர், இயக்குனர் என பன்முகம் கொண்ட இந்த திறமைசாலியை குசேலனின் திரைக்கதையாசிரியர் என்றே பெரும்பாலான தமிழர்களுக்கு தெரியும்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ்ப் படம் ஒன்றில் நடிக்கிறாராம் சீனிவாசன். ஷங்கர் தயாரிப்பில் தாமிரா இயக்கும் ரெட்டைச்சுழி படம்தான் சீனிவாசன் நடிக்க சம்மதித்திருக்கும் படம்.
பாலசந்தர், பாரதிராஜா இருவரையும் மனதில் வைத்து ரெட்டைச்சுழி கதையை உருவாக்கியிருக்கிறார் தாமிரா. சிஷ்யனின் படத்தில் நடிக்க சிகரம் எப்போதோ ரெடி. இமயம்தான் மகளின் திருமண வேலை காரணமாக இழுத்தடித்து வருகிறார்.
இவர்கள் இருவருடன் சீனிவாசன். கற்பனையே கலக்கலா இருக்கே!