ஷாருக் கானின் ரோபோ!

இந்த வார இறுதியில் ரோபோ படப்பிடிப்பு தென் அமெரிக்க நாடான பிரேசிலில் தொடங்குகிறது.

இதோ அதோ என்று இழுத்த ரோபோ படப்பிடிப்பு, வதந்திகளை முறியடித்து பிரேசிலில் தொடங்குகிறது. இயற்கை எழில் கொஞ்சும் பிரேசில் பகுதிகளில் ரஜினி, ஐஸ்வர்யா ராய் இடம்பெறும் பாடல் காட்சியை எடுக்க திட்டமிட்டுள்ளார் ஷங்கர். இதற்காக ரஜினி, ஐஸ், ஷங்கர் மற்றும் கேமராமேன் ரத்னவேலு உள்ளிட்ட ரோபோ யூனிட் பிரேசில் செல்கிறது.

இது ஒருபுறமிருக்க, மும்பையிலுள்ள மோஷன் பிக்சர்ஸ் அசோசியேஷனில் ரோபோ பெயரில் ஒன்பது பெயர்களை பதிவு செய்துள்ளார் நடிகர் ஷாருக் கான். ரோபோ, ரோபோ மை ஹீரோ, மே ரோ ரோபோ... என்று ஒன்பது பெயர்கள்.

ஷங்கர் முதலில் ஷாருக் கானிடம்தான் ரோபோ கதையை கூறினார். கதை பிடித்து, தனது ரெட் சில்லீஸ் நிறுவனம் சார்பில் ரோபோவை தயாரிக்க ஒத்துக் கொண்டார் ஷாருக். பிறகு நடந்த கதை விவாதத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ரோபோ புராஜெக்டிலிருந்து ஷாருக் கான் அவராகவே விலகினார்.

ஷங்கர் ரோபோ பெயரில் மும்மொழிகளில் படம் இயக்குவது யாரையும் விட ஷாருக்கிற்கே நன்றாக தெரியும். அப்படியிருந்தும் ரோபோ பெயரை அவர் பதிவு செய்திருப்பது, அவரது நலம் விரும்பிகளுக்கே அதிர்ச்சி அளித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்