சென்னையில் லூயி மால் திரைப்படங்கள்!

திரைப்பட மேதை லூயி மாலின் திரைப்படங்களை காண அரிய சந்தர்ப்பம். பிரெஞ்ச் கலாச்சார மையம் அலையன்ஸ் பிரான்சியஸ் இந்த அரிய சந்தர்ப்பத்தை சென்னை ரசிகர்களுக்கு ஒழுங்கு செய்துள்ளது.

பிற திரைப்பட இயக்கங்களுடன் இணைந்தும், தனித்தும் திரைப்பட விழாக்களை அலையன்ஸ் பிரான்சியஸ் அவ்வப்போது நடத்தி வருகிறது. அந்த வகையில் லூயி மாலின் புகழ்பெற்ற திரைப்படங்களையும் திரையிட முன்வந்துள்ளது.

எந்தெந்த திரைப்படங்கள் என்பதையும், திரைப்படங்கள் திரையிடப்படும் நேரத்தையும், சென்னை கல்லூரி சாலையில் அமைந்துள்ள அலையன்ஸ் பிரான்சியஸுக்கு நேரில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

நேரில் செல்ல முடியாதவர்கள் 28279803 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்கள் பெறலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்