மணிரத்னம் செய்த மாற்றம்!

நாயகன், அக்னி நட்சத்திரம், திருடா திருடா, அலைபாயுதே... மணிரத்னமும் பி.சி. ஸ்ரீராமும் இணைந்து பணியாற்றிய படங்கள்.

மணிரத்னத்தின் புதிய படம் Ravan-ல் பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவை கவனிப்பதாக கூறப்பட்டது. மணி ஸ்கிரிப்ட் தந்தார். அற்புதமான கதை. அவர் ஸ்டார்ட் சொல்வதற்காக காத்திருக்கிறேன் என்றார் பி.சி. ஸ்ரீராம்.

திடீ‌ர் திருப்பமாக பி.சி.யை நீக்கிவிட்டு மணிகண்டனுக்கு வாய்ப்பளித்துள்ளார் மணிரத்னம். ஷாருக் கானின் ஆஸ்தான ஒளிப்பதிவாளராகிவிட்ட மணிகண்டன், அவரின் ஓம் சாந்தி ஓம் படத்திற்கும் ஒளிப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மணியின் மணமாற்றத்திற்கு என்ன காரணம்? அவர் படத்தின் கதை போலவே மர்மமாக உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்