கரண் எடுத்த ரிஸ்க்!

ரிஸ்க் எடுப்பது எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி. வடிவேலுவின் இந்த டயலாக் யாருக்கு பொருந்துகிறதோ. கரணுக்கு சாலப் பொருத்தம்.

கனகவேல் காக்க படத்தின் சண்டைக் காட்சியில் மேலே உள்ள டயலாக்கை நிஜமாக நிகழ்த்திக் காட்டி அணைவரின் நெஞ்சாங்கூட்டிலும் பயம் பயிரிட்டார் கரண்.

மேற்படி சண்டைக் காட்சியில் நாற்பதடி உயர கிரேனிலிருந்து கரண் குதிக்க வேண்டும். டூப் நடிகரை தயார்படுத்தி எப்படி குதிக்க வேண்டும் என்று விளக்கிக் கொண்டிருந்திருக்கிறார் ஸ்டண்ட் மாஸ்டர்.

இடையில் புகுந்த கரண், டூப் வேண்டாம் என்று விலக்கியதோடு, அவ்வளவு உயரத்திலிருந்து குதித்தது, அனைவரையும் கலவரப்படுத்தியுள்ளார்.

இதில் விசேஷம், கரண் ரிஸ்க் எடுத்த அன்றுதான் அவருக்குப் பிறந்தநாள். அப்புறமென்ன... மெகா கேக்கை வரவழைத்து கரண் குதித்ததற்கும் சேர்த்து கேக் வெட்டி கொண்டாடியது கனகவேல் காக்க யூனிட்.

வெப்துனியாவைப் படிக்கவும்