நம்ப முடியவில்லை இல்லையா. உண்மை, ராஜாதிராஜாவில் நமிதா இருக்கிறார்.
பிலிம் இல்லாமல் படமெடுத்தாலும், நமிதா இல்லாமல் படம் எடுக்க மாட்டார் ஷக்தி சிதம்பரம். அந்தளவுக்கு கதையைவிட நமிதா கிளாமர் மீது இவருக்கு நம்பிக்கை.
இவரின் ராஜாதிராஜாவில் ஆறு ஹீரோயின்கள். நமிதாவை ட்ரிபிள் ரோலிலேயே நடிக்க வைத்திருக்கலாம். என்ன காரணமோ ராஜாதிராஜாவுக்கு கால்ஷீட் இல்லையென கைவிரித்தார் நமிதா. இப்போது அவருக்கு பதில் நடிப்பவர் காம்னா.
படத்தில் கிளாமர் நர்சாக வருகிறார் காம்னா. இவரிடம் ஊசி போட நோயாளிகள் முட்டி மோதுவார்களாம். நமிதா நடிக்காத குறையைப் போக்க, காம்னாவின் கவர்ச்சி நர்ஸ் கேரக்டருக்கு நமிதா என்று பெயர் வைத்து திருப்திப் பட்டுக் கொண்டிருக்கிறார் ஷக்தி.
பொன் வைக்க வேண்டிய இடத்தில் பெயர்! இதுவும் நல்லாத்தான் இருக்கு.