மாமனார் ரஜினியுடன் சந்திரமுகி, குசேலன். மருமகன் தனுஷுடன் யாரடி நீ மோகினி. மாமனார், மருமகன் இருவருக்கும் ஏற்ற ஜோடியாக நடித்த நயன், விரைவில் அண்ணன், தம்பிக்கு ஜோடியாகிறார்.
அக்டோபரில் லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் தொடங்குகிறது. கார்த்திக்கு ஜோடி நயன்தாரா.
கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யா நடிக்கயிருக்கும் படத்துக்கும் நயன்தாராவிடமே கால்ஷீட் கேட்டிருக்கிறார்கள்.
இப்படியே போனால் அப்பா சிவாஜியுடனும் மகன் பிரபுவுடனும் இணைந்து நடித்த அம்பிகா, ராதா சாதனையை நயன் நசமன் செய்தாலும் செய்வார்.