தமிழில் போலீஸ் போலீஸ்?

செவ்வாய், 2 செப்டம்பர் 2008 (19:07 IST)
மாவில் இணைந்து நடிக்கிறார்கள் ஸ்ரீகாந்தும், ப்ருத்விராஜும். அதற்குமுன் இவர்கள் இணைந்து நடித்த படமொன்று திரைக்கு வருகிறது.

காக்க... காக்க ஸ்டைலில் தெலுங்கு இயக்குனர் மன்மோகன் இயக்கியிருக்கும் போலீஸ் கதை, போலீஸ் போலீஸ். ஸ்ரீகாந்தும், ப்ருத்விராஜும் நேர்மையான இளம் போலீஸ் அதிகாரிகளாக நடித்துள்ளனர்.

எண்பது சதவீத படப்பிடிப்பு முடிந்த போலீஸ் போலீஸ் விரைவில் திரைக்கு வருகிறது. ஸ்ரீகாந்த், ப்ருத்வியுடன் ப்ருத்வியின் ஜோடியாக நடித்திருக்கும் கமாலினி முகர்ஜியும் தமிழுக்கு தெரிந்த முகங்களே.

அதனால் போலீஸ் போலீஸை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

மாவை போலீஸ் முந்துவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்