செவ்வாய், 2 செப்டம்பர் 2008 (19:06 IST)
விளம்பரப் படங்களில் நடித்துவந்த உ.பி. தேவதை ப்ரியதர்ஷனின் பொய் சொல்ல போறோம் படத்தின் நாயகி. பெயர் பியா.
பொய் சொல்ல போறோம் வெளிவரும் முன் கிடைத்த இன்னொரு வாய்ப்பு, அஜித்தின் ஏகன். இதில் அஜித்தின் தம்பியாக வரும் நவ்தீப்புக்கு பியா ஜோடி.
பெயர் வட இந்திய ஸ்டைலில் இருப்பதாக பலரும் சொல்லவே, பியா என்ற பெயரை ப்ரீத்தி என்று தென்னிந்திய சாயலில் மாற்றியுள்ளார்.
விளம்பரங்களில் நடித்தாலும் சினிமாதான் பியா... ஸாரி, ப்ரீத்தியின் டார்கெட்டாம். அதற்காக என்ன செய்யவும் அவர் தயாராம்.
பெயரை மாற்றியபோதே அது தெரிந்துவிட்டதே!