பாலியல் தொழிலாளியாக மேகா!

செவ்வாய், 2 செப்டம்பர் 2008 (19:00 IST)
நடிப்பை வெளிப்படுத்த ஆசைப்படும் நடிகைகள் சொல்லி வைத்தாற்போல் பாலியல் தொழிலாளி கேரக்டரையே தேர்வு செய்கிறார்கள்.

தபு, கரீனா கபூர், மனிஷா என வடக்கே இந்தப் பட்டியல் ரொம்ப நீளம். தெற்கிலும் பாதகமில்லை. பாரதி, சங்கீதா, மேகா நாயர் என டைட் காம்படிஷன்.

மூன்று மாதத்திற்கு ஒரு படம் என அட்டவணை போட்டு வேலை செய்யும் சஞ்சய்ராமின் பூவா தலையா படத்தில் மேகா நாயுடுக்கு பாலியல் தொழிலாளி வேடம். கூடவே தாதாவையும் காதலிப்பாராம். வெள்ளை மனசுடன் சிவப்பு தொழில் செய்யும் வித்தியாசமான வேடம்.

மேகாவின் ஒத்துழைப்பைப் பார்த்த சஞ்சய்ராம் தனது அடுத்தப் படம் திருமயத்தில் ஷாமுக்கு மேகாவை ஜோடியாக்கியிருக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்