ரஜினி சம்பந்தப்பட்ட எந்த விஷயத்தையும் கேள்விக்குறியுடனே சொல்ல முடிகிறது. அவர் எப்போது என்ன முடிவெடுப்பார் என்பது அவரை வைத்து படம் இயக்கும் இயக்குனர்களுக்கே தெரிவதில்லை.
ரோபோ படத்தின் போட்டோ செஷனுக்காக அமெரிக்கா சென்ற ரஜினி, குசேலன் பிரச்சனை எழுந்ததும், போட்டது போட்டபடி சென்னைக்கு பறந்து வந்தார்.
வரும் ஐந்தாம் தேதி பிரேசிலில் ரோபோ ஷூட்டிங்கை தொடங்க திட்டமிட்டுள்ளார் ஷங்கர். ரஜினி கலந்து கொள்வாரா என்பது இன்று வரை திக்... திக்...
பிரேசிலில் உலக அதிசயங்களில் ஒன்றான வானுயர்ந்த ஏசு சிலை உள்ளது. இங்கு ரோபோவின் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளாராம் ஷங்கர். ரஜினியுடன் ஐஸும் உண்டாம். பிரமாண்டம் ஸ்டார்ட் ஆகிவிட்டது. பத்திரிகைகளுக்கு ஸ்கூப் தகவல்களுக்கு இனி பஞ்சமில்லை!