சரோஜாவுக்கு இடைக்காலத் தடை!

திங்கள், 1 செப்டம்பர் 2008 (20:04 IST)
திரைக்கு வருமுன் சரோஜாவுக்குதான் எத்தனை தடைகள்! குசேலன் விவகாரத்தில் பிரமிட் சாய்மீரா விநியோக உரிமை வாங்கிய சரோஜாவையும் இழுத்துவிட்டனர் சிலர். அதிலிருந்து மீள்வதற்குள் இன்னொரு தடை இந்தியன் வங்கி வடிவத்தில்.

சரோஜா படத்துக்காக இந்தியன் வங்கியின் 84.50 லட்சம் கடன் வாங்கியிருக்கிறார் தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா. படம் 5 ஆம் தேதி ரிலீஸ். ஆனால், கடன் தொகையில் முதல் தவணை கூட இதுவரை கட்டவில்லையாம்.

ஆக, கடனுக்கு ஒரு வழி சொல்லும் வரை படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என வங்கிக் கடன் வசூலிக்கும் தீர்ப்பாயத்தில் இந்தியன் வங்கி சார்பில் மனு செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள் மறு உத்தரவு வரும் வரை படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து தீர்ப்பளித்தனர்.

கோடி பிரச்சனையை சமாளித்த சரோஜா இந்த லட்ச பிரச்சனையையும் கடந்துவிடும்.

வெப்துனியாவைப் படிக்கவும்