ராஜ்கிரணின் அதிகாரம்!

திங்கள், 1 செப்டம்பர் 2008 (19:59 IST)
முக்கியமான வேடமாகவும் இருக்க வேண்டும்... நல்லவனாகவும் இருக்க வேண்டும். கதை சொல்ல வருகிறவர்களிடம் ராஜ்கிரண் விதிக்கும் நிபந்தனை இது. இந்த நிபந்தனை ஒத்துப் போனால்தான் சம்பளம், கால்ஷீட் எல்லாம்.

ராஜ்கிரண் நடிக்கும் சரித்திரம் அவரின் நிபந்தனைக்கு உட்பட்ட படம். இன்னொன்று, அதிகாரம். ராஜ்கிரண், தாரக ரத்னகுமார் நடிக்கின்றனர். ஹீரோயின்கள் இரண்டு பேர். பூர்ணா, பூஜா காந்தி. கிராமத்து பெரிய மனிதரை பற்றிய கதையாம்.

தொடர்ந்து தனது நிபந்தனைக்குட்பட்ட படங்கள் வருவதால், தயாரித்து இயக்கி, நடிக்கும் மலைக்கள்ளன் புராஜெக்டை தள்ளிவைத்துள்ளார் ராஜ்கிரண்.

வெப்துனியாவைப் படிக்கவும்