ரவுண்ட் கட்டும் ரகஸியா!

திங்கள், 1 செப்டம்பர் 2008 (17:30 IST)
ரகஸியாவை நம்பி தயாராகிறது ஒரு படம். தம்பிதுரையின் மூணாறு. பெயருக்கேற்ப மூணாறில் ரகஸியாவை வைத்து பாடல் காட்சியொன்றை எடுத்தார் தம்பிதுரை. இரண்டரை மணி நேர படத்துக்கு ஒரேயொரு பாடல் மட்டும் போதாதே!

சென்னையில் மேலுமொரு பாடல் ரகஸியாவை வைத்து எடுக்கப்பட்டது.

மின்மினிக்கு தங்கச்சி நான்
ஆம்பளைங்க என் கட்சி
தெரியுமா... தெரியுமா...

பாடலுக்கு ரகஸியா இடுப்பை வளைத்த விதம் பரவசம்.

ரகஸியாவை ரவுண்ட் கட்டி காட்சிகளை எடுத்தாலும், மூணாறின் ஹீரோயின் இவரில்லை. அதற்கு இருக்கவே இருக்கிறார் ரித்திமா. அவருக்கு ஜோடி புதுமுகம் ரஞ்சித். அப்படியானால் ரகஸியா? தொட்டுக்க ஊறுகாய்.

பார்த்து... திகட்டிவிடப் போகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்