தயா‌ரி‌ப்பாள‌ர் ச‌‌ங்க‌த்‌தி‌ல் ராமகோபால‌ன்!

சனி, 30 ஆகஸ்ட் 2008 (19:17 IST)
கோவை‌யி‌ல் நட‌ந்த ‌நிக‌ழ்‌ச்‌சி ஒ‌ன்‌றி‌ல் ‌சீமா‌ன் இ‌ந்து‌‌க் கடவு‌ள்களை இ‌ழிவாக‌ப் பே‌சினா‌ர் எ‌ன்று இ‌ந்து அமை‌ப்பு ம‌ற்று‌ம் க‌ட்‌சிகளை‌ச் சே‌ர்‌ந்தவ‌ர்க‌ள் கலவர‌த்‌தி‌ல் ஈடுப‌ட்டது தெ‌ரியு‌ம்.

இ‌ந்த ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல் இ‌ந்து மு‌ன்ன‌ணி‌த் தலைவ‌ர் ராமகோபால‌னை‌க் கலவர ‌வியாபா‌ரி எ‌ன்று வ‌ர்‌ணி‌த்தா‌ர் ‌சீமா‌ன். அ‌ந்த ‌வியாபா‌ரி ‌சீமா‌ன் ‌மீது புகா‌ர் அ‌ளி‌த்து‌ள்ளா‌ர். ‌சீமா‌ன் ‌மீது நடவடி‌க்கை எடு‌ங்க‌ள் எ‌ன்று புகா‌ர் கொடு‌த்தது தயா‌ரி‌ப்பாள‌ர் ச‌ங்க‌த் தலைவ‌ர் ராம நாராயண‌னிட‌ம்.

சீமா‌ன் ‌திரை‌ப்பட இய‌க்குந‌ர். அவரை‌க் க‌ண்டி‌க்கு‌ம் க‌ட்டு‌ப்படு‌த்து‌ம் அ‌திகார‌ம் தயா‌ரி‌ப்பாள‌ர்க‌ள் ச‌ங்க‌த்‌தி‌ற்கு‌க் ‌கிடையாது. இய‌க்குந‌ர்க‌ள் ச‌ங்க‌‌த்‌தி‌ற்கே உ‌ண்டு. அதனா‌ல் புகாரை இய‌க்குந‌ர் ச‌ங்க‌த்‌தி‌ற்கு அனு‌ப்‌பி‌யிரு‌க்‌கிறா‌ர் ராம நாராயண‌ன்.

சீமா‌ன் ‌மீது நடவடி‌க்கை எடு‌க்கு‌ம் அவ‌சிய‌ம் இய‌க்குந‌ர் ச‌ங்க‌த்‌தி‌ற்கு இ‌ல்லை. அதனா‌ல் ராம கோபால‌னி‌ன் புகா‌‌ர் இ‌ப்போது ‌கிண‌ற்‌றி‌ல் போ‌ட்ட க‌ல். அசையவே அசையாது!

வெப்துனியாவைப் படிக்கவும்