பந்தயத்தில் விஜயின் பன்ச்!

சனி, 30 ஆகஸ்ட் 2008 (19:09 IST)
பந்தயத்தில் ஒரு காட்சியில் மட்டும் தோன்றுகிறார் விஜய். திரையில் வரும் ஓரிரு நிமிடங்களில் தீப்பிடிப்பது போல் சில பன்ச் வசனங்கள் பேசுகிறார்.

என்னுடைய அப்பா என்னை ஆம்பளையா மட்டும் வளர்க்கலை. கொம்பு ‌ீவிய காளையா வளர்த்திருக்கிறார் என்பது அந்த பன்ச்-களில் ஒன்று.

குசேலனில் ரஜினியின் கவுரவ வேடத்தை பூஸ்ட் செய்து, ரஜினி படம்போல் காட்டினார்கள். அந்த தவறை பந்தயத்தில் ரிப்பீட் செய்யாமல் இருக்க சில நிபந்தனைகள் விதித்துள்ளார் விஜய்.

படம் வெளிவரும் வரை விஜய் சம்பந்தப்பட்ட புகைப்படங்களையும் வெளியிடக் கூடாது.

விஜய் படம் என்பது போல் பந்தயத்தை விளம்ரப்படுத்தக் கூடாது.

இந்த இரண்டுக்கும் தயாரிப்பாளர் தரப்பு தலையசைத்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்