சொல்லாமலே, சுந்தர புருஷன் உட்பட சில படங்களில் லிவிங்ஸ்டன் கதாநாயகனாக நடித்துள்ளார். இவை அனைத்தும் 100 நாள் படங்கள் என்பது ஆச்சரியமான உண்மை. அஞ்சாதேயில் இவரது குணசித்திர நடிப்பும், குசேலனில் நகைச்சுவை நடிப்பும் பெரிதும் பாராட்டப்பட்டது.
ஆரம்ப காலத்தில் லிவிங்ஸ்டன் என்றால் அமைதியாக வந்து அட்டகாசம் செய்யும் வில்லன். குஷ்பு நடித்த கேப்டன் மகள் இதற்கு சிறந்த உதாரணம்.
வில்லன், காமெடி, குணச்சித்திரம் என பலமுகம் காட்டும் லிவிங்ஸ்டன், தனது திறமையை முதலீடாக்கி நடிப்பு கல்லூரி ஒன்றை தொடங்கியுள்ளார். பாய்ஸ் கம்பெனி என்று ஆரம்பிக்கப்பட்டிருக்கும் அப்பள்ளியில் திரையுலக ஜாம்பவான்களின் நடிப்பு அனுபவத்தை மாணவர்கள் நேரடியாக தெரிந்துகொண்டு, தங்கள் திறமையை பட்டை தீட்டலாம்.
தொழில்முறை நடிப்புப் பயிற்சி தரப்படுவதால், புதுமுகங்களுக்குரிய பயமில்லாமல் கேமரா முன் இங்கு பயில்கிறவர்கள் சகஜமாக நடிக்கலாம்.