சனி, 30 ஆகஸ்ட் 2008 (18:58 IST)
ஆர்த்தி குமார் இயக்கத்தில் வைஜெயந்தி ஐ.பி.எஸ். ரீ- மேக்கில் சினேகா நடிப்பது உறுதி. ஆரம்பத்தில் தயங்கியவரை லம்பாக அட்வான்ஸ் கொடுத்து ஆஃப் செய்துள்ளார் கிச்சா.
யார் இந்த கச்சா?
சந்தேகம் வேண்டாம். இயக்குநர் கிச்சாவேதான்! வைஜெயந்தி ஐ.பி.எஸ்.ஸின் ரீ-மேக்கை கிச்சாவின் ஸ்ரீ மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது.
வைஜெயந்தி ஐ.பி.எஸ்.ஸில் பலாத்காரம் செய்யப்படும் அப்பாவி இளம்பெண் வேடத்தில் மீனா நடித்திருந்தார். அவரைப் போன்ற இளம் நடிகையை ரீ-மேக்கிற்காக தேடி வருகிறார்கள். அதுபோல பவர்ஃபுல் வில்லனுக்கும் வலை வீசியுள்ளனர். இவர்கள் அகப்பட்டால், அக்டோபரில் படப்பிடிப்பு துவங்கிவிடுமாம்.