சரண்யா மோகன் - ரைஸிங் ஸ்டார்

வெள்ளி, 29 ஆகஸ்ட் 2008 (17:20 IST)
தங்கை ரோலில் இருந்து கதாநாயகியாக ப்ரமோஷன் ஆகியிருக்கிறார் சரண்யா மோகன். இவர் யார் என்று தெரியாதவர்களுக்க ஒரு சின்ன அறிமுகம்.

யாரடி நீ மோகினியில் தனுஷை ஒருதலையாக காதலித்து அவருடன் பாலக்காட்டு பக்கத்திலே பாடலுக்கு ஆடுவாரே.. இப்போது நினைவு வந்துவிட்டதா?

ஜெயம் கொண்டான், மகேஷ் சரண்யா மற்றும் பலர் ஆகிய படங்கள் சரண்யா நடிப்பில் வெளிவர உள்ளன. இவற்றில் சின்ன வேடங்கள்.

இவரை ஷோலோ ஹீரோயினாக்கியிருப்பவர் ராஜு ஈஸ்வரன். இவர் இயக்கும் பஞ்சாமிர்தம் படத்தில் சரண்யா மோகன் ஹீரோயினாக நடிக்கிறார்.

இது தவிர ஈரம், வெண்ணிலா, கபடி குழு படங்களிலும் இவர்தான் நாயகியாம். சரண்யாவின் கள்ளமில்லா சிரிப்புதான் அவருக்கு கதாநாயகி வேடங்களை பெற்றுத் தருகிறதாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்