வெள்ளி, 29 ஆகஸ்ட் 2008 (17:19 IST)
தரண்... வளர்ந்து வரும் இசையமைப்பாளர். இவரின் திறமையைப் பார்த்து, தனது போடா போடியில் இசையமைக்க வாய்ப்பு அளித்துள்ளார் சிம்பு.
சிம்புவின் ஆஸ்தான இசையமைப்பாளர் யுவனுக்கு இதனால் கோபம் வரவேண்டுமே? இல்லை! ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், தரணின் ஆசையை நிறைவேற்ற உள்ளார் யுவன்.
தனது இசையில் யுவனை பாட வைக்க வேண்டும் என்று தரணுக்கு ஆசை. பாக்யராஜின் மகன் சாந்தனு நடிக்கும் புதிய வார்ப்புகள் படத்தில் யுவனை பாட அழைத்திருக்கிறார் தரண். யுவனும் அதற்கு உடன்பட்டிருக்கிறார்.
டூயட் பாடலான அதில் யுவனுடன் இணைந்து பாடயிருப்பவர் ஸ்ரேயா கோஷல்.
யுவனுக்கு 24 கேரட் பவுன் மனசு!