வெள்ளி, 29 ஆகஸ்ட் 2008 (17:18 IST)
பெயர் வைக்கவில்லை, படப்பிடிப்பை தொடங்கவில்லை... அதற்குள் மணிரத்னம் இயக்கும் புதிய படத்தின் பாடல்களை எழுதி முடித்து விட்டார் வைரமுத்து.
மணிரத்னம் படம் என்று வரும்போது, வைரமுத்துக்கு போட்டியாக இருப்பவர் குல்சார். மணிரத்னம் படத்தின் இந்தி பதிப்பின் பாடல்களை எழுதுகிறவர். ஒரே சிச்சுவேஷன்... இது கவிஞர்கள். எது சிறந்தது என்று இருவருக்குள்ளும் எப்போதும் போட்டி.
இதுபற்றி வைரமுத்துவிடம் கேட்டதற்கு அவர் சொன்ன சுவாரஸிய விளக்கம் இது.
குல்சர் சிறந்த பாடலாசியர். என்னை விட சிறப்பாக பாடல் எழுதுவார். ஆனால், நான் எழுதும் தமிழ்மொழி அவர் எழுதும் இந்தியை விட இனிமையானது!
அப்படியானால் யார் எழுதும் பாடல் சிறப்பானது?
உக்காந்து யோசியுங்கள்... ஒரு வேளை பதில் கிடைக்கவில்லை!