குசேல‌ன்- ’முடிவு'‌க்கு வராத ‌பிர‌ச்சனை!

வியாழன், 28 ஆகஸ்ட் 2008 (17:54 IST)
குசே‌ல‌ன் ‌ரி‌‌லீசான‌தி‌லிரு‌ந்து ‌பிர‌ச்சனைகளையே பெ‌ட்‌ஷ‌ீ‌ட்டா‌க்‌கி தூ‌ங்‌கி‌கிறா‌ர் ர‌ஜி‌னி. அவ‌ரி‌ன் ‌நி‌‌ம்ம‌தியை குலை‌க்க இதே இ‌ன்னொரு போரா‌ட்ட‌ம்.

குசேல‌னி‌ல் வரு‌ம் கா‌ட்‌சிக‌ளி‌ல் ‌சில முடி‌‌திரு‌த்து‌ம் தொ‌ழிலா‌ள‌ர்களை பு‌ண்படு‌த்துவதாக அ‌றி‌‌க்கை வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ளது த‌மி‌ழ்நாடு முடி‌திரு‌த்து‌ம் தொ‌ழிலாள‌ர் நல‌ச் ச‌ங்க‌ம்.

இதனை க‌ண்டி‌த்து நாளை குலேச‌ன் இய‌‌க்குன‌ர் ‌பி.வாசு ‌வீ‌ட்டு மு‌ன் முடி‌‌திரு‌த்து‌ம் தொ‌ழிலாள‌ர்க‌ள் க‌ண்டன ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் நட‌‌த்து‌கிறா‌ர்க‌ளா‌ம். இதனை ச‌ங்க‌‌த்‌தி‌ன் மா‌நில தலைவ‌ர் ‌பி.நடேச‌ன் தெ‌‌‌ரிவ‌ி‌த்து‌ள்ளா‌ர்.

இது ஒருபுற‌மிரு‌க்க, குசேல‌ன் ‌பிர‌ச்சனை‌யி‌ல் ர‌ஜி‌னி‌க்கு ஆதரவாக செ‌ன்னை‌யி‌ல் கூ‌ட்ட‌ம் நட‌த்த ‌சில ர‌சிக‌ர் ம‌ன்ற‌ங்க‌ள் ‌தீ‌ர்மா‌னி‌த்து செ‌ன்னை‌க்கு பயணமாக இரு‌ந்தன‌. எ‌ரி‌கிற ‌பிர‌ச்சனை‌யி‌ல் எ‌ண்ணெ‌ய்யாக இதுவேறா எ‌ன தலைமை ம‌ன்ற‌ம் மூலமாக அவ‌ர்க‌ள் பயண‌த்தை ர‌‌த்து செ‌ய்து‌ள்ளா‌ர் ர‌ஜி‌னி.

பட‌ம் ‌தியே‌ட்டரை ‌விட‌்டு போன ‌பிறகு‌ம் ‌பிர‌ச்சனைகளு‌க்கு குறை‌வி‌ல்லை. இதுதா‌ன் குசேல‌ன் எபெஃ‌க்டா?

வெப்துனியாவைப் படிக்கவும்