சரித்திரத்தில் சித்தாரா!

புதன், 27 ஆகஸ்ட் 2008 (19:40 IST)
மிருகம் இயக்குனர் சாமியின் சரித்திரத்தில் இடம் பிடித்துள்ளார் நடிகை சித்தாரா.

புது வசந்தம் மூலம் சினிமாவுக்கு வந்த சித்தாரா கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமாவில் நடிக்கமாலிருந்தார். சீரியலில் ஒதுங்கிவிட்ட அவர், சாமியின் சரித்திரத்தில் ராஜ்கிரணின் மனைவியாக நடிக்கிறார்.

இதில் ராஜ்கிரணுக்கு சிலம்பம் சொல்லிக் கொடுக்கும் வாத்தியார் வேடம். இவரது மகன் ஆதி. ஆதியின் ஜோடியாக ஸ்ரீதேவிகா நடிக்கிறார். நீண்ட நாட்களாக ராஜ்கிரணுக்கு ஜோடி தேடிக் கொண்டிருந்தார் சாமி. சித்தாராவால் சாமியின் தேடல் ஒரு முடிவுக்கு வந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்