துரையில் இந்தி வில்லன்!

புதன், 27 ஆகஸ்ட் 2008 (19:34 IST)
எண்பத்தைந்து நாட்களில் துரை படப்பிடிப்பை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார் இயக்குனர் ஏ. வெங்கடேஷ்.

படத்துக்கு கதை, திரைக்கதை, எழுதியிருப்பவர் அர்ஜுன். வசனம், பட்டுக்கோட்டை பிரபாகர். இயக்கம் மட்டுமே ஏ. வெங்கடேஷ்.

ஆக்சனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் வில்லனாக நடிப்பது இந்தி நடிகர்.

பாலிவுட்டிலிருந்து வில்லன்களை இறக்குமதி செய்வது புதிதல்ல என்றாலும், சமீபமாக அது அதிகரித்துள்ளது. சூர்யா நடிக்கும் கே.வி. ஆனந்தின் அயனிலும் இந்தி நடிகர் ஒருவரே வில்லன்.

துரையில் வில்லனாக நடிப்பவர் சமித். இப்படத்திற்கு மும்பையிலிருந்து மேலுமொருவர் அழைத்து வரப்பட்டிருக்கிறார். அவர் சுமா. கவர்ச்சி நடிகை. காரமும் மும்பை, கவர்ச்சியும் மும்பை.

வெப்துனியாவைப் படிக்கவும்