தற்கொலை முயற்சியா? ரம்பா விளக்கம்!

புதன், 27 ஆகஸ்ட் 2008 (14:23 IST)
நேற்று முன்தினம் இரவு ஆபத்தான நிலையில் சென்னை விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ரம்பா. சிகிச்சை தொடங்கும்முன் வதந்திகள் நாலு கால் பாய்ச்சலில் வலம் வந்தன.

த்ரீ ரோசஸ் படத்தால் நிறைய கடன், போஜ்புரி நடிகர் ரவிகிஷனுடனான காதல் தோல்வி. மன உளைச்சல்... இதெல்லாம் சேர்ந்து தற்கொலைக்கு முயன்றார் ரம்பா என கோடம்பாக்கத்தில் பரபரப்பு.

உடல்நிலை தேறிய ரம்பாவுக்கு அதிர்ச்சி. வரலட்சுமி நோன்பு, டயட் என்று சரியாக சாப்பிடாததால் வாந்தியெடுத்து மயக்கமானேன். அதற்கு இப்படியொரு வில்லங்க விளக்கமா? தற்கொலை பண்ணிக்கிற அளவுக்கு நான் கோழையில்லை என்று பரபரப்புக்கு எல்லை கட்டியிருக்கிறார்.

வதந்தி கிளப்பியவர்களுக்கு நல்ல வேளை ரம்பா மயக்கமானதுதான் தெரியும். வாந்தி எடுத்தது தெரியாது. தெரிந்திருந்தால்...?

ரம்பாவின் அதிர்‌ச்சியின் டெஸிபல் கூடியிருக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்