‌மீ‌ண்டு‌ம் ஜவஹ‌ர் இய‌க்க‌த்‌தி‌ல் தனு‌ஷ்

செவ்வாய், 26 ஆகஸ்ட் 2008 (18:14 IST)
இதெ‌ன்ன ‌ரீ-மே‌க் யுகமா? மு‌ன்ன‌ணி நடிக‌ர்க‌ள் ஆளு‌க்கொரு ‌‌‌ரீ-மே‌க்‌கி‌ல் நடி‌க்‌கிறா‌ர்க‌ள். ப‌ட்டிய‌ல் வே‌ண்டுமா... தொட‌ர்‌ந்து படியு‌ங்க‌ள்.

அ‌ஜி‌த் நடி‌க்கு‌ம் ஏக‌ன் ஷாரு‌க்கா‌ன் நடி‌த்த பட‌த்‌தி‌ன் ‌ரீ-மே‌க். ‌விஜ‌ய்‌‌யி‌ன் ‌வி‌ல்லு‌ம் இ‌ந்‌தி‌ப் படமொ‌ன்‌றி‌ன் ‌ரீ-மே‌க்கே. மாதவ‌ன் நடி‌க்கு‌ம் குரு எ‌ன் ஆளு... அதுவு‌ம் இ‌‌ந்‌தி எ‌ஸ் பா‌ஸி‌ன் ‌ரீ-மே‌க். சு‌ந்த‌‌ர் ‌சி.‌ யி‌ன் ‌தீ தெலு‌ங்கு பட‌த்‌தி‌ன் ‌ரீ-மே‌க்.

தெலு‌ங்கு ‌ரீ-மே‌க்கான யாரடி ‌‌நீ மோ‌கி‌னி‌யி‌ல் நடி‌த்த தனு‌ஷ் ‌மீ‌ண்டு‌ம் ஒரு தெலு‌ங்கு ‌ரீ-மே‌க்‌கி‌ல் நடி‌க்‌கிறா‌ர். மோ‌கி‌னியை இய‌‌க்‌கிய ஜவஹரே இத‌ற்கு‌ம் இய‌க்க‌ம். தெலு‌ங்‌‌கி‌ல் வெ‌ற்‌றிகரமாக ஓடிய ஆ‌‌ர்யா பட‌த்தை ‌‌‌ரீ-மே‌க்‌கி‌ற்காக தே‌ர்‌ந்தெடு‌த்‌தி‌ற்‌கிறா‌ர்க‌ள்.

சிவா‌‌ஜி ‌பி‌லி‌ம் ச‌ர்‌க்யூ‌ட் பட‌த்தை தயா‌ரி‌க்‌கிறது. தே‌வி ஸ்ரீ ‌‌‌பிரசா‌த் இசையமை‌க்‌கிறா‌ர். ‌ஸ்ரேயா, தனு‌ஷ் ஜோடியாக நடி‌க்கலா‌ம் எ‌ன்‌‌கி‌ன்றன தகவ‌ல்க‌ள்.

வெப்துனியாவைப் படிக்கவும்