வடிவேலு செய்த குளறுபடியால் வில்லு படத்தின் படிப்பிடிப்பு தடைபட்டிருக்கிறது. தடைபட்டது சுவிட்சர்லாந்தில் என்பது வருத்தமான விஷயம்.
சுவிட்சர்லாந்தில் பாடல் மற்றும் வசனக் காட்சிகளை எடுக்க வில்லு யூனிட் விமானம் ஏறியது. விஜய், நயன்தாராவுடன் பிரகாஷ்ராஜ், ஸ்ரீமனும் இந்த டீமில் உண்டு. வடிவேலுவும் அவர்களுடன் சென்றிருக்க வேண்டும். ஆனால், புயல் ஏனோ இந்தப் பயணத்தை புறக்கணித்தது.
ஐங்கரன் நிறுவனம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் இறங்கி வரவில்லையாம் கறுப்பு காமெடியர். வடிவேலு இல்லாமல் பிரகாஷ் ராஜையும், ஸ்ரீமனையும் எவ்வளவு நாள் சும்மாவே வைத்திருப்பது?
படப்பிடிப்பில் கலந்து கொள்ளமலே இருவரும் சென்னை திரும்ப, பிரச்சனை விஸ்வரூபமெடுத்திருக்கிறது. வடிவேலுவை ஒப்பந்தம் செய்யலாமா என ஒட்டுமொத்த இண்டஸ்ட்ரியும் மறுபரிசீலனையில் இறங்கி உள்ளது.