விஜயகாந்த், சரத்குமார் கட்சி தொடங்கியபோது கப்சிப்பாக இருந்த வடிவேலு, சிரஞ்சீவியை கேட்காமலே வாழ்த்தியிருக்கிறார்.
நாளை திருப்பதியில் கட்சி தொடங்கும் சிரஞ்சீவி, பொதுக் கூட்டத்தில் கட்சியின் பெயர், கொடி, கொள்கை ஆகியவற்றை அறிவிக்கிறார். ரசிகர்களின் வரவால் திருப்பதி நிரம்பி வழிகிறது.
சிரஞ்சீவி அரசியலுக்கு வருவது ஆந்திராவுக்கு மட்டுமின்றி, தமிழகத்திற்கும் நல்லது. சிரஞ்சீவி மனிதநேயமிக்கவர், உயர்ந்த நிலையிலும் தன்னலம் கருதாதவர் என சிரஞ்சீவியின் அரசியல் பிரவேசத்தை வரவேற்றுள்ளார் வடிவேலு.
தமிழ் நடிகர்கள் கட்சி தொடங்கியபோது கருத்து சொல்ல தயங்கியவர், சிரஞ்சீவியை ஆதரித்துப் பேசியது, அவரது மனிதநேயத்தை முன்வைத்தே என்கிறார்கள். எதுவாக இருப்பினும் வடிவேலுவின் வார்த்தையில் உண்மை இருப்பதை மறுக்க முடியாது.