மூணாறு ஏற்கனவே குளிர். அதற்கு மேலும் ஏசி போட்டது போல் ஆட்டம் ஒன்று போட்டிருக்கிறார் ரகஸியா.
தம்பிதுரை இயக்கும் படத்தின் பெயர்தான் மூணாறு. ரஞ்சித்-ரித்திமா என்ற புதுமுகங்கள் நடிக்கின்றனர். இவர்களுக்கு இணையான வேடத்தில் ரகஸியா.
மூணாறின் ஹைலைட்களில் ரகஸியாவின் நடனங்களும் ஒன்று. இரண்டு நடனங்களில் ஒன்றை மூணாறில் எடுத்திருக்கிறார் இயக்குனர். மூணாறை போலவே அழகு ததும்ப வந்திருக்கிறதாம் பாடல்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு செந்தில் இப்படத்தில் நடிக்கிறார். கவுண்டமணி இல்லாமலே இதில் காமெடி செய்திருக்கிறாராம்.