தொடர்ந்து நடிப்பேன் - மதுமிதா திருமண செய்தி!

சனி, 23 ஆகஸ்ட் 2008 (17:30 IST)
திருமண நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு கல்யாண செய்தி ஒன்றை அறிவித்துள்ளார் மதுமிதா. மதுமிதாவின் ரசிகர்களுக்கு இது கற்கண்டு செய்தி. ஆம், திருமணம் முடிந்தாலும் தொடர்ந்து சினிமாவில் நடிப்பாராம்!

ஹைதராபாத்தை சேர்ந்த மதுமிதாவை குடைக்குள் மழை மூலம் தமிழில் அறிமுகப்படுத்தியவர் பார்த்திபன். மதுமிதாவுக்கும் தெலுங்கு நடிகர் சிவபாலாஜிக்கும் காதல் மலர்ந்தது இங்கிலீஷ்காரன் படப்பிடிப்பில். இதில் சிவபாலாஜிக்கு மதுமிதா ஜோடி.

சின்ன கிசுகிசு கூட இல்லாமல் சின்சியராக வளர்ந்த காதல் இருவீட்டார் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் வரை வளர்ந்துள்ளது. "தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் ஒப்புக்கொண்ட படங்களை முடிக்க ஆறு மாதம் ஆகும். அதற்குப் பிறகே திருமணம்" என்ற சொன்ன மதுமிதா, வருங்கால கணவர் சம்மதம் தெரிவித்ததால் தொடர்ந்து படங்களில் நடிப்பேன் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்