அசினின் கால்ஷீட் கிடைத்தால் போதும், கரன்ஸியை அள்ளிடலாம் என்பது கோடம்பாக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய நம்பிக்கை. எப்போது நாஸிக்கின் கரன்சி மிஷினாக மாறினார் அசின்? இதோ... புள்ளி விவரங்களை அள்ளித் தருகிறார்கள்.
சுமாரான படங்களைத் தந்துக் கொண்டிருந்த விஜயை தூக்கிவிட்ட படம் போக்கிரி. அனைத்து சென்டர்களிலும் ஹிட். போக்கிரியில் உடன் நடித்தது அசின்.
நீண்ட காலமாக ப்ளாக் பஸ்டர் படங்களை தராமலிருந்த கமலின் கமர்ஷியல் வேல்யூவை புதுப்பித்தது தசாவதாரம். முதலீடு செய்த அறுபது கோடியை முதல் வாரத்திலேயே அறுவடை செய்ததாக தசாவதாரம் பற்றி கூறுகிறார்கள். இதிலும் அசினே நாயகி.
இந்தி கஜினி 90 கோடிக்கும், லண்டன் ட்ரீம்ஸ் 120 கோடிக்கும் வியாபாரமாகியிருப்பது இன்னொரு ஆச்சரியம். இந்த வியாபாரம் அசினை முன்னிறுத்தி இல்லையென்றாலும், அசின் இருந்தால் வியாபாரம் உறுதி என்றொரு நம்பிக்கை. அசின் கோடி கேட்டாலும் கொடுக்க க்யூ ஒன்று காத்திருக்கிறது. அசின் என்றால் அதிர்ஷ்டம்?