ராமாயணத்தை நவீன கதை மாந்தர்ககளை வைத்து இயக்குகிறார் மணிரத்னம். புராணங்களை இப்படி புனரமைப்பது இவருக்கு புதிதல்ல. கர்ணன் - துரியோதனன் நட்பு தளபதியாக திரைவடிவம் கொண்டதை அனைவரும் அறிவர்.
இந்தியில் மணிரத்னத்தின் புதிய படத்தின் பெயர் Ravan. ராமன் அபிஷேக் பச்சன், சீதை ஐஸ்வர்யா ராய், அனுமனாக கோவிந்தா. சரி, ராவணன்?
நம்மூர் விக்ரம் என்கின்றன செய்திகள். இதே படத்தின் தமிழ் பதிப்பில் விக்ரம் ராமன். ஐஸ்வர்யா ராய் சீதை, ராவணனாக பிருத்விராஜ்.
ஒரே கதையின் எதிரெதிர் கதாபாத்திரங்களில் நடிப்பது சுலபமாக யாருக்கும் கிடைக்காத வரம். விக்ரமுக்கு அது கிடைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. சீயானின் நடிப்பு பசிக்கு நல்ல தீனி. ஜமாய்ங்க விக்ரம்!