பேரரசு இயக்கும் திருவண்ணாமலையின் நாயகி மாற்றப்பட்டுள்ளார்.
கவிதாலயா தயாரிப்பில் அர்ஜுன் நடிக்க திருவண்ணாமலையை இயக்கி வருகிறார் பேரரசு. இதில் அர்ஜுன் ஜோடியாக நடிக்க, மும்பை மாடல் சானியா வஹிலை ஒப்பந்தம் செய்தனர். அர்ஜுன், சானியா இருவரையும் வைத்து போட்டோ செஷனையும் நடத்தினார் பேரரசு.
இரண்டு பாடல் காட்சி மற்றும் சில வசனக் காட்சிகள் முடிந்த நிலையில், சானியா வஹில் படத்திலிருந்து நீக்கப்பட்டு பூஜா காந்தி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.